புலிகளின் ஏழாவது விமான ஓடு பாதையும் கைப்பற்றப்பட்டது
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏழாவது விமான ஓடு பாதையையும் இராணுவத்தினர் இன்று காலையில் கைப்பற்றியதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
50 மீட்டர் அகலமும் 2 கிலோ மீட்டர் நீளமும் கொண்ட இந்த விமான ஓடு பாதை முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சுந்தரபுரம் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவினரே இந்த விமான ஓடு பாதையைக் கைப்பற்றியுள்னர்.
இதற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆறு விமான ஓடு பாதைகளைப் படையினர் கைப்பற்றியிருந்தமை தெரிந்ததே.
0 விமர்சனங்கள்:
Post a Comment