அமைச்சர் ப.சிதம்பரத்தின் கூற்றுக்கு தி.மு.க. வரவேற்பு : யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி மனிதச்சங்கிலி
இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்தாலேயன்றி, யுத்த நிறுத்தம் என்பது அர்த்தமற்ற ஒன்று என இந்திய மத்திய அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான தி.மு.க. தெரிவித்துள்ளது.
இலங்கையில் தமிழ் மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்த கருத்தை தமிழகத்தின் மாநில உள்விவகார அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
அதேவேளை இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில், இலங்கை அரசாங்கம் யுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும். புலிகள் ஆயுதங்களைக் கீழே வைப்பதாக அறிவித்தால் போதும் இந்திய மத்திய அரசு யுத்தத்தை நிறுத்துமாறு இலங்கையை வலியுறுத்தும் என்று கூறியிருந்தார்.
மேலும், விடுதலைப் புலிகளையும் இலங்கை அரசையும் யுத்த நிறுத்த இணக்கப்பாட்டுக்கு வருமாறு வலியுறுத்தி தி.மு.கவின் இளைஞர் அணி எதிர்வரும் 21ஆம் திகதியன்று சென்னையிலும் ஏனைய மாவட்ட கட்சித் தலைமை அலுவலகத்தின் முன்பாகவும் மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபடும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment