ஐரோப்பிய நிறுவனம் புலிகளுக்கு உதவி?
முல்லைத்தீவில் மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கிக் கப்பல் ஐரோப்பிய நிறுவனம் ஒன்றால் தயாரிக்கப்பட்டது என போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார். “மீட்கப்பட்ட அந்த நீர்மூழ்கிக் கப்பலின் சில பாகங்கள் சுவிஸ்லாந்தின் பேஸ்லி நகரிலுள்ள ஹொஸ்லர் எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை” என்றார் அமைச்சர்.
2002ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை காலப் பகுதியில் விடுதலைப் புலகிளின் உயர்மட்டக் குழுவினர் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த போதே இவற்றுக்கான உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். “விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் இந்த நகரில் மூன்று நாட்கள் தங்கியிருந்துள்ளார்” என அமைச்சர் கூறினார்.
இதேவேளை, நோர்வே மற்றும் சுவிஸ் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களால் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த உபகரணங்கள் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்து விசாரணைகளை நடத்துமாறு இலங்கை பாதுகாப்புத் தரப்பினர், சர்வதேசப் பொலிஸான இன்டர்போலிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment