இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க இரண்டு தடவை ஆட்சியிழந்துள்ளது : கருணாநிதி
இலங்கைத் தமிழர்களுக்காகத் திராவிட முன்னேற்றக் கழகம் தனது ஆட்சியை இரண்டு முறை இழந்திருப்பதாகத் தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்த போது இலங்கை தமிழர்களுக்காக எதனையும் செய்துவிட வில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் தெரிவித்திருந்த கருத்துக்குப் பதிலளிக்கும் முகமாகவே முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 1976 ஆம் மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக தனது ஆட்சியை திராவிட முன்னேற்ற கழகம் இழந்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்காக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் தாக்கப்படுவதைத் தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment