சிவிலியன்கள் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படக் கூடாது-சர்வதேச மன்னிப்புச் சபை
தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் காரணம் காட்டி சிவிலியன்கள் மீது படையினர் அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடாதென சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை நிபுணர் யொலென்டா பொஸ்டர் தெரிவித்துள்ளார். எனினும் இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடியாக சிவிலியன்கள் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயுத போராட்டங்களின்போது ஒரு தரப்பினரின் யுத்தக் குற்றங்களை காரணம்காட்டி தமது யுத்த குற்றங்களை நியாயப்படுத்த முடியாதென்பதனை சகலரும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்கள் சர்வதேச யுத்த சட்டங்களுக்கு அமைவாக பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இலங்கை இராணுவத்திற்கு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த பிரதேசத்திற்கு சுயாதீன ஊடகவியலாளர்களை அனுமதிக்காமையினால் உண்மை நிலவரங்களை அறிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment