தமிழர் அமைப்பு அமெரிக்காவில் தடை
அமரிக்காவின் மெரிலான்ட் பகுதியில் செயற்பட்டுவந்த தமிழ்கள் அமைப்பின் சொத்துக்களை முடக்குவதாக அமெரிக்க திறைசேரி அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணிவந்ததாகக் கூறியே இந்த அமைப்பை அமெரிக்கா தடைசெய்துள்ளது.
இந்த அமைப்புடன் எந்தவிதமான வங்கிச் செயற்பாடுகளையோ, வர்த்தகச் செயற்பாடுகளையோ பேணக்கூடாதென அமெரிக்கா அறிவித்துள்ளது.
“தமிழீழ விடுதலப் புலிகளும் ஏனைய பயங்கரவாத அமைப்புக்களைப் போன்றதொரு அமைப்பே. அறக்கட்டளைகளை உருவாக்கி நிதிசேகரித்து அவற்றை வன்முறையுடன்கூடிய தமது கொள்கைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர்” என அமெரிக்க திறைசேரியின் வெளிநாடுகளின் சொத்துக்களைக் கட்டுப்படுத்தும் அலுவலகத்தின் பணிப்பாளர் அடம் சுய்பின் கூறினார்.
இதேவேளை, அமெரிக்காவிலிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கடந்த 2007ஆம் ஆண்டு வெள்ளைமாளிகையின் உத்தரவுக்கமைய தடைசெய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment