நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களின் முழுமையான விபரங்களை இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை
கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களின் முழுமையான விபரங்களை உறவினர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில், மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு இணையதளத்தில் விசேட ஹொட்மெயில் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.
புலிகளின் பகுதிகளிலிருந்து வந்து வவுனியாவில் கதிர்காமர், அருணாச்சலம், ஆனந்தகுமாரசுவாமி, இராமநாதன் ஆகிய நிவாரணக் கிராமங்களில் தற்காலிக, நிரந்தர வீடுகளில் தங்கவைக்கப்படும் மக்களின் முழுமையான விபரங்களை அமைச்சு எடுத்து வருகின்றது. விபரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்ட பின்னர் அமைச்சின் இணையதளத்தில் வெளியிடப்படும். புலம் பெயர்ந்துள்ளவர்கள் தமது உறவுகள் எங்குள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள இது ஏதுவாக அமையுமென மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கடந்த 13ம் திகதி மாலைவரை 34.430பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்து சேர்ந்துள்ளனர் என குறிப்பிட்ட அமைச்சர் பதியுதீன், நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள தமது உறவினர்களுக்கு புலம் பெயர்ந்துள்ளவர்கள் உதவிகள் செய்வதற்கு ஏதுவாக மேற்படி கிராமங்களில் அரச வங்கிகளான மக்கள் வங்கி, இலங்கை வங்கிக் கிளைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment