இது எங்கள் தேசம் இது எங்கள் அரசு என்ற தலைப்பில் மூவர்ண சுவரொட்டிகள் யாழ்ப்பாணம் எங்கும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
மேற்படி சுவரொட்டிகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினதும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினதும் வர்ணப் புகைப்படங்களுடன் ஏ9 பாதையினைத் திறந்து எங்கள் உணவிற்கும் மருந்திற்கும் அத்தியாவசிய தேலைக்கும் வழி அமைத்த பாதுகாப்புப் படையினருக்கும் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் எமது நெஞ்சம் நிறைந்த தன்றிகள் என குடாநாட்டு மக்களின் சார்பில் இச்சுவரொட்டிகள் சகல இடங்களிலும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment