புலிகளின் மனிதஉரிமைகளை மீறும் வன்செயல்களைக் கண்டித்து லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையர்கள் என்னும் அமைப்பின் ஏற்பாட்டில் புலிகளின் மனித உரிமைகளுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து லண்டனில் உள்ள புலம்பெயர் வாழும் இலங்கை மக்களால் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று லண்டனில் பிரதமரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என விரும்பும் புலம்பெயர் மக்கள் 4000 பேர்கள் வரையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புலிகள் தொடர்ந்தும் பொதுமக்களை மனித கேடயங்களாக பாவித்து வருவது குறித்து தமது ஆழ்ந்த கண்டனங்களை வெளிப்படுத்தும் வகையில் சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment