இன்னும் ஐந்;து நாட்களில் என்ன நடக்கப் போகிறது என அறியலாம் -பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் உள்ள பொதுமக்களை மீட்டு அங்கு சில நாட்களில் பாதுகாப்பு வலயங்களை நிறுவப்போவதாக இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜப்ஷ தெரிவித்துள்ளார். இன்னும் ஐந்து நாட்களில் என்ன நடக்கப்போகிறது என அறியலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் இடங்களை நோக்கி நெருங்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் படையினர் பொதுமக்களை தவிர்த்து தமது எறிகணை தாக்குதல்களை நடத்துவதில் அதிக சிரமங்களையும் கட்டுப்பாடுகளையும் எதிர்கொள்வதாக கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர் விடுதலைப்புலிகளை படையினர் நெருங்கிச் சென்ற பின்னர் எறிகணை வீச்சுக்கு அவசியமிருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment