விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது : கோத்தபாய
விடுதலைப்புலிகள் சரணடையும் விடயம் தொடர்பில் சமரசம் எதற்கும் இடமில்லை என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலரான கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.விடுதலைப்புலிகள் சரணடைவதாயின், நிபந்தனைகள் எதுவுமின்றியே அவர்கள் சரணடைய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களைக் கைவிடுவது தொடர்பில் சமரசப் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு கொடையாளி நாடுகள் விடுதலைப்புலிகளை கேட்டுக்கொண்ட இரு தினங்களில் அவரது இந்தக் கருத்து வந்துள்ளது.
தமிழ் மக்களுக்காக தனி நாட்டைக் கோரும் விடுதலைப்புலிகளின் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அவர்கள் மீது முக்கிய இராணுவ நடவடிக்கையினை இலங்கை இராணுவம் மேற்கொண்டு வருகிறது.
விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்களுக்கு பொது மன்னிப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளார். இலங்கையிலும், இந்தியாவிலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பல குற்றங்களில் புலிகளின் முக்கிய தலைவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், அவர்கள் சட்ட நடைமுறைகளை எதிர்கொண்டாக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment