முல்லைத்தீவு கடற்பரப்பில் புலிகளின் இரு படகுகள் அழிப்பு - டோரா படகு தாக்கப்படவில்லை என்கிறார் பேச்சாளர்
முல்லைத்தீவு கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த கடற்படையினரின் டோராப் படகுகள் மீது கடற்புலிகள் எவ்வித தாக்குதலையும் நடத்தவில்லை.
மாறாக, புலிகளின் படகுகள்மீது கடற்படையினர் தாக்குதலை நடத்தி ஆறு புலிகள் இயக்க உறுப்பினர்களைக் கொன்றதுடன், இரண்டு புலிகளின் படகுகளையும் அழித்துள்ளனர். என்றும் அதனால் கடற்படையினருக்கு எவ்விதச் சேதங்களும் ஏற்படவில்லை என்றும் கடற்படையின் பேச்சாளர் டீ.கே.பீ. தசநாயக்க தெரிவித்தார்.
கடற்புலிகள் நடத்திய வலிந்த தாக்குதலில் கடற்படைக்குச் சொந்தமான டோராப் படகொன்று மூழ்கடிக்கப்பட்டதுடன் மேலுமொன்று சேதமாக்கப்பட்டதில் கடற்படையினர் 15 பேர் கொல்லப்பட்டதான இணையத்தளச் செய்தியானது ஜோடிக்கப்பட்டதாகும் எனவும் அவர் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
இன்று அதிகாலை 5.30 மணிமுதல் 6 மணிவரையான காலப்பகுதியில் முல்லைத்தீவிலிருந்து சுமார் 52 கிலோமீற்றர் தொலைவிலான கடற்பரப்பில் கடற்புலிகளுக்குள்ம் கடற்படையினருக்கும் இடையில் கடும் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த மோதல் சம்பவத்தில் கடற்புலி உறுப்பினர்களில் நால்வரும் கடற்கரும்புலிகளில் இருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். அத்துடன் இதன் போது கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் கடற்படைக்குச் சொந்தமாக சூப்பர் டோரப் படகொன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் மேலுமொன்று பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளது என்று இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இவ்வாறான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் பலவீனமடைந்துள்ள புலிகள் இவ்வாறான பொய்யான செய்திகளின் மூலம் அனைவரது கவனத்தையும் திசை திருப்ப முÙற்சிக்கின்றனர் என்றும் கடற்படையின் பேச்சாளர் மேலும் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment