ஜெயலலிதா தனது பிறந்தநாளை கொண்டாடுவதில்லை என அறிவித்துள்ளார்!
இலங்கையில் தமிழர்கள் செத்து மடிந்துகொண்டுள்ள நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடுவதில்லை என அ.தி.மு.க.பொது செயலர் செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டு கொண்டுள்ளார்கள் இந்த நிலையில் தனது பிறந்தநாளை இந்த ஆண்டு கொண்டாடவேண்டாம் என்று ஜெயலிலதா கட்சி தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவேண்டும், இலங்கை தமிழர்களின் உரிமைகளையும், உயிர்களையும் பாதுகாப்பதற்காக மத்திய அரசால் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அ.தி.மு.க முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளதுடன், தமிழினம் காக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கோ அ.தி.மு.க.வுக்கோ மாற்று கருத்து கிடையாது என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment