முல்லை - சாலைக்கு வடக்கே புலிகளின் பாரிய மண் அணை தாக்கி அழிப்பு
புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தை மீட்டெடுக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகா ப்புப் படையினர் சாலைக்கு வடக்கேயுள்ள புலிகளின் பாரிய மண் அரண்களை தாக்கியழித்து, பதுங்கு குழிக ளை கைப்பற்றியுள்ளனர்.
கடற் புலிகளின் இறுதி தளமான முல்லைத்தீவு சாலை பிரதேசத்தை நோக்கி கடுமையான தாக்குதல்களை நடத்தி இராணுவத்தினர் வேகமாக முன்னேறி வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இதேவேளை, விசுவமடு வடக்கில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்த அதி நவீன இரண்டு மாடி சொகுசு கட்டடத் தொகுதிகளை இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையினர் கண்டு பிடித்துள்ளனர்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் அவரது குடும்ப அங்கத்தவர்கள் சகிதம் இந்த வீட்டில் வாழ்ந்திருக்க லாமென பாதுகாப்புப் படையினர் நம்புவதாக தெரிவித்த அவர், இங்கிருந்து பெருந்தொகையான பொருட்களையும் மீட்டெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆறு வீட்டுத் தொகுதிகளை உள்ளடக்கிய இந்த கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள நான்கு வீடுகள் முற்றிலும் குளிரூட்டப்பட்டுள்ளது.
அதற்கு அண்மித்த பகுதியில் மற்றுமொரு நிலக்கீழ் பதுங்கு குழி ஒன்றும் அமையப் பெற்றுள்ளது. இந்த முகாம் பிரபாகரனோ அல்லது புலிகளின் உயர் தலைவர் ஒருவரோ வந்து பயிற்சி செய்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
மாபல்கள் பதிக்கப்பட்ட இந்த வீட்டின் மின்சார பாவனைக்காக 3 சுபர் சவுன்ட் ஜெனரேட்டர்கள் பாவிக்க ப்பட்டுள்ளன. 42 1/2 செ. மீ. அளவுடைய மார்க்ஸ் ஸ்பென்சர் ரக அதிக விலையைக் கொண்ட சேர்ட் ஒன்றையும் இங்கிருந்து மீட்டெடுத்துள்ளதுடன் ஒக்ஸிஜன் கலன்களையும் மீட்டெடுத்துள்ளனர்.
இதேவேளை, உடையார்கட்டு மற்றும் உடையார் கட்டு குளம் பிரதேசங்களில் இராணுவத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் செயலணியினர் ஊடுருவித் தாக்குதல் களை மேற்கொண்டுள்ளனர்.
உடையார்கட்டு பிரதேசத்தில் நடத்திய தேடுதலின் போது பாரிய தொலைத் தொடர்பு கோபுரமுடனான முகாம் ஒன்றை படையினர் நேற்றுக் கைப்பற்றியுள்ளனர்.
200 அடி நீளமான பாரிய ஒளி, ஒலி பரப்பு மற்றும் தொலைத் தொடர்பு கோபுரங்களை கண்டெடுத்துள்ளனர். வெளிநாட்டு தயாரிப்பிலான இந்த கோபுரம் மடித்த நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் புலிகள் தங்களது எதிர்கால பாவனைக்காக வைத்திருக் கலாம் என்றார்.
இதுதவிர,
30 சுற்று ரவைகள்,
கைக்குண்டுகள் – 04,
நிஷான் ரக வேன்,
லொறி,
மண்ணெண்ணெய் பரல்கள்,
மோட்டார் சைக்கிள் – 01,
கொள்கலன் – 01,
கூடாரங்கள் – 03,
பெருந் தொகை யான ஆயுதங்கள்
மற்றும் கொல்லப்பட்ட புலிகளின் 7 சடலங்களையும் மீட்டெடுத்துள்ளனர்.
தொலைக்காட்சி – 01,
கிளேமோர் குண்டு – 03,
கணனி – 01,
டெடனேட்டர்கள்
0 விமர்சனங்கள்:
Post a Comment