தற்கொலை அங்கி எடுத்துச் செல்லும் லொறி பொலிஸாரிடம் சிக்கின
திருகோணமலை துறைமுக பொலிஸ் உயரதிகாரி ஒரு வரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மறைத்து வைக்கப் பட்டிருந்த புலிகளுக்குத் தற்கொலை அங்கிகளை எடுத்துச் செல்வதற்குப் பயன்படுத்திய லொறி ஒன்றை பொலிஸார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.
குச்சவெளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள புலி சந்தேக நபர் ஒருவரிடம் இருந்து கிடைத்த தகவலின்படி இந்த லொறி மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர நேற்று கூறினார். இந்த லொறியை பயன்படுத்தி புலிகளுக்கு தற்கொலை அங்கிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
திருகோணமலை விசேட நடவடிக்கைப் பிரிவு இதனை மீட்டதோடு இதனுடன் பொலிஸாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தப்படுகிறது.
திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment