பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி யாழ். விஜயம் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தோரை பார்வையிட்டார்
பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வன்னியில் போரில் சிக்குண்டுள்ள மக்களின் அவலங்களுக்கு தீர்வு கிடைக்க கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுத்ததுடன் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் உள்ள வர்களையும் சந்தித்து அவர்களின் நலன்களை விசாரித்தறிந்தார்.
யாழ். குடாவிற்கு விஜயம் கொண்டுள்ள பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி மரியசௌரி யாழ். ஆயர், குருக்கள், சமயத் தலைவர்களை சந்தித்து யாழ்.
குடாநாட்டு நிலைமைகளை விசாரித்து அறிந்ததுடன் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு வன்னி மக்களுக்காக விசேட கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுத்துள்ளார்.
அத்துடன் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களுக்குச் சென்றவர்களது நலன் குறித்து விசாரித்தறிந்ததுடன் இது குறித்தும் யாழ். குடாநாட்டின் நிலைமைகள் தொடர்பாகவும் பாப்பரசருக்கு நேரில் சென்று தெரிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment