புலிகளின் கட்டளைத் தளம் அழிப்பு
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள புலிக ளின் பிரதான தொலைத் தொடர்பு நிலையம் மற்றும் புலி முக்கியஸ்தர்களின் கட்டளைத் தளம் ஆகியவற்றை விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.
விமானப் படைக்குச் சொந்தமான ஜெட் ரக தாக்குதல் விமானங்களால் நடத் தப்பட்ட தாக்குதல்கள் வெற்றிய ளித்துள்ள தாக அவர் மேலும் தெரிவித்தார்.
புதுக்குடியிப்புக்கு வடகிழக்கே 1.5 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கட்டளைத் தளம் மற்றும் புதுக் குடியிருப்புச் சந்திக்கு வடக்கே 1.5 கிலோ மீற்றர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த தொலைத் தொடர்புத் தளம் ஆகியவற்றை இலக்குவைத்தே நேற்றுக்காலை 10.10 மணியளவில் இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்ட தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேச த்திலுள்ள புலிகளின் பல்வேறு இலக்குகள் மீது நேற்று முன்தினம் கடுமையான தாக்குதல்களை விமானப் படையினர் நடத்தியுள்ளனர்.
13 தடவைகள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் வெற்றியளித் துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
புலிகளின் பிடியில் எஞ்சியுள்ள பிரதேசங்களை முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் பல முனைகளில் முன்னேறிவரும் இராணுவத்தின் 58, 59வது படைப் பிரிவினருக்கும், நான்காவது செயலணிக்கும் உதவியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் விமானப் படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment