முல்லைத்தீவில் புலிகள் கொடுத்த அதிர்ச்சி தாக்குதல் -லக்பிம இதழின் பார்வையில்..
முல்லைத்தீவு பகுதியில் கடந்தவாரம் விடுதலைப்புலிகள் அலை அலையாக வந்து தாக்குதலை நடத்தியதாகவும் இத்தாக்குதலை முறியடிப்பதற்கு இராணுவ தலைமையகத்தில் இருந்து இராணுவத்தளபதி சரத்பொன்;சேகா தாக்குதலை நெறிப்படுத்தியதாகவும் லக்பிம ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது இதுதொடர்பாக லக்பிம வாரஏட்டில் வெளிவரும் பாதுகாப்பு பகுதியில் தெரிவிக்கப் பட்டுள்ளவையின் முக்கிய பகுதிகள்.. இலங்கை அரசாங்கம் தனது 61வது சுதந்திர தினமான நாளை கொண்டாடும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கையில் அதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகள் முல்லைத்தீவில் பாரிய தாக்குதல்களை நடத்தினர் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை பொலித்தீன் பைகளில் பொதிசெய்துவருகின்றனர் எனவே முல்லைத்தீவு நீரேரியை கடந்து தாக்குதலினை நடத்தக்கூடும் என கடந்தவாரம் இராணுவ புலனாய்வுத்துறையினர் எச்சரித்திருந்தனர். 59வது படையணியின் முன்னனி பாதுகாப்பு நிலைகள் கடல் நீரேரியை நோக்கியே அமைந்துள்ளன எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விடுதலைப்புலிகளின் 30 கரும்புலிகள் படையினரின் நிலைகளுக்குள் ஊடுருவியிருந்தனர் அவர்கள் படையினரை ஏற்றிச்சென்ற உழவூர்த்தி மற்றும் பேருந்து என்பவற்றை முதலில் தாக்கியழித்தனர் இதனைத்தொடர்ந்து பீரங்கி மற்றம் மோட்டார் தாக்குதல்கள் படையினரின் நிலைகள் மீது மழைபோல பொழியப்பட்டன எறிகணைகள் வீழ்ந்து வெடித்தபோது ஏறத்தாழ 700 தொடக்கம் 1000 வரையான விடுதலைப்புலிகள் தாக்குதலை தொடங்கினர். 59 பிரிகேட்டைச்சேர்ந்த 7வது கெமுனுவோச் பற்றலியன் இந்த மோதலில் சிக்கிக்கொண்டது இதனைத்தொடர்ந்து படையினர் 3 சதுரகிலோ மீற்றர் தூரம் பின்நகர்ந்தனர் மோத் இடம்பெற்ற பகுதிக்கு மேலதிக படையணிகள் நகர்த்தப்பட்டன 53வது படையணியின் வான்நகர்வு பிரிகேட்டைச்சேர்ந்த படையினரும் அங்கு நகர்த்தப்பட்டனர் முல்லைத்தீவு நகரத்தை கைப்பற்றுவதே விடுதலைப்புலிகளின் திட்டம் இராணுவம் பெருமளவில் பல்குழல் எறிகணைகள் மற்றும் பீரங்கி எறிகணை தாக்குதல்களை நடத்தியதுடன் வான்படையினரும் உதவிக்கு அழைக்கப்பட்டனர். கடற்புலிகளின் தளபதி சூசை கடல் நடவடிக்கைகயை வழிநடத்த கேணல் பானு மற்றம் சொர்ணம் ஆகியோர் தரைநடவடிக்கைகளை வழிநடத்தினர் 59வது படையணியின் முல்லைத்தீவு நகரத்தில் இருந்தும் படையணி நான்கை ஓட்டுச்சுட்டான் வரையிலும் பின்நகர்த்துவதற்கு அவர்கள் முயற்சித்திருந்தனர். படையினரின் பதில் நடவடிக்கைகளை இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா இராணுவத்தலைமையகத்தில் இருந்து நேரடியாக நெறிப்படுத்தினார் இரண்டாவது நாள்விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் படையினரின் முன்னணி நிலைகள் மீது வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனம் மூலம் தாக்குதலை நடத்தினர் இதனைத்தொடர்ந்து விடுதலைப்புலிகளின் அணிகள் தாக்குதலை உக்கிரப்படுத்தியிருந்தன இராணுவம் சிறப்பு அணிகளையும் கொமாண்டோ அணிகளையும் அங்கு நகர்த்தியது கடந்த புதன்கிழமை அதிகாலைவரை மோதல்கள் தொடர்ந்தன இராணுவத்தளபதி கடந்த புதன்கிழமை அதிகாலை 3.00 மணிவரை கட்டளை தலைமையகத்தில் இருந்து தாக்குதலை நெறிப்படுத்தினார் எனினும் பாதுகாப்பு அமைச்சு இத்தாக்குதல் தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment