யாழ்.தேவி தொடருந்து நேற்று முதல் வவுனியா வரை சேவையில்
மதவாச்சி வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த யாழ்.தேவி தொடருந்து சேவையை மீண்டும் வவுனியா வரையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் நேற்று முதல் யாழ்.தேவி தொடருந்து சேவையானது வவுனியா வரையில் இடம்பெறும் என்று தொடருந்து போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். வவுனியாவிற்கும் மதவாச்சிக்குமிடையிலான தொடருந்துப் பாதையில் இடம்பெற்று வந்த திருத்த வேலைகள் காரணமாக கடந்தவாரம் யாழ்.தேவி தொடருந்து சேவையானது மதவாச்சி வரையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
0 விமர்சனங்கள்:
Post a Comment