இலங்கை தேசிய குங்பூ அணி சேலத்திலிருந்து திருப்பி அனுப்பி வைப்பு
சேலத்தில் நடைபெறும் குங்பூ தேசிய விளையாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த இலங்கை வீரர்கள் அங்கிருந்து உடனடியாகத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சேலத்தில் நடைபெறும் குங்பூ தேசிய விளையாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையைச் சேர்ந்த ஒன்பது பேர் கொண்ட குழுவினர் சேலத்துக்கு சென்றிருந்தனர். ஆனால் அவர்களின் வருகையை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் இலங்கையின் தேசியக் கொடியையும் எரித்தனர்.இதனையடுத்து இலங்கைக் குழுவினர் உடனடியாகத் திருப்பியனுப்பப்பட்டனர்.
இது தொடர்பாக சேலம் மாவட்ட பொலிஸ் ஆணையாளர் சுனில் குமார் சிங் தெரிவிக்கையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த முப்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் சேலம் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளரும் அடங்குவதாகத் தெரிவித்தார்.விளையாட்டு போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போது இலங்கை தேசியக் கொடி ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைத்துக் கொழுத்தப்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 விமர்சனங்கள்:
Post a Comment