கோத்தாபாயவின் எச்சரிக்கையை மறுக்கின்றார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. சுவிஸ் தூதுவருக்கு மகிந்த விளக்கம்.
இலங்கையில் செயற்படுகின்ற சில சர்வதேச ஊடகங்களும் ஜேர்மன் மற்றும் சுவிஸ் நாட்டின் ராஜதந்திரிகளும் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அவர்கள் அவ்வாறு தொடர்ந்தும் செயற்பட்டால் நாடு கடத்தப்படுவார்கள் எனவும் பாதுகாப்பமைச்சின் செயலர் கோட்டாபாய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இவ் எச்சரிக்கையை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்ட சுவிற்சலாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சு இது விடயமாக தனது பார்வையை திருப்பியுள்ளது. சுவிற்சலாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஜீன் பிலிப் அவர்களின் வேண்டுதலுக்கிணங்க இலங்கைக்கான சுவிற்சலாந்து தூதுவர், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதுகாப்பமைச்சின் செயலாளர் கூறியதாக பத்திரிகைகளில் வெளியாகிய செய்தி தொடர்பாக வினவியுள்ளார். சுவிஸ் தூதுவருக்க பதிலளித்த ஜனாதிபதி பத்திரிகைகளில் வெளியாகியுள்ள மேற்படி செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அவ்வாறன ஒரு கருத்தை தனது தம்பியும் பாதுகாப்பமைச்சில் செயலருமான கோத்தாபாய ராஜபக்ச தெரிவித்திருக்கவில்லை என்றும் இவை ஊடகங்களால் திரிவு படுத்தப்பட்டுள்ள செய்தி எனவும் தான் சம்பந்தப்பட்ட ஊடகத்தினரிடம் இச்செய்தி தொடர்பான விளக்கத்தை கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment