ஒரு இனம் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்த இடமளியேன்
“ஒரு இனம் இன்னொரு இனத்தை அடிமைப் படுத்துவதற்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டேன். இப்படியான செயலுக்கு இற்றைவரை காரணமாக இருந்தவர்கள் விரைவில் கடலுக்குள் தூக்கிவிடு வோம்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறி னார்.
அதேநேரம்! “ஒரு இனம் இன்னொரு இனத்தை பணயக் கைதிகளாக வைத்திருக்கவும் நான் ஒரு போதும் இடமளிக்கமாட்டேன்’ என்றும் ஜனா திபதி தெரிவித்தார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன் தினம் 7000 முஸ்லிம்கள் திரண்டிருந்த மாபெரும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-
தேர்தல் வரும் காலங்களில் எல்லாம் ஐ. தே. க. வினர் முஸ்லிம் மக்கள் தமது சமய கோட் பாடுகளை முன்னெடுக்கும் பொழுது வேறொரு அரசாங்கம் பதவிக்கு வந்தால் அவர்கள் அனு பவித்து வந்த உரிமைகள் அனைத்தையும் பிரித்து விடுவார்கள் என்ற கோசம் ரணில் விக்கிரமசிங்க வினால் எழுப்பப்பட்டதை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
முஸ்லிம்களுக்கும் எனக்குமுள்ள தொடர்பு இன்று நேற்று ஏற்பட்டதொன்றல்ல. அவர்களது சமய, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நான் நன்கு அறிந்து மதிப்பவன் என்ற வகையில் இவ்வாறு தெரிவிக்கின்றேன்.
பலஸ்தீன மக்களின் விடுதலைக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும் உருவாக்கப்பட்ட இலங்கை பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் தலைவராக இருந்து வந்த அனுபவம் எனக்குண்டு. அவர்கள் படும்துயரத்தையும் அண் மையில் நான் கண்டு அதற்கான எனது அனுதாபத்தையும் தெரிவித்திருந்தேன்.
பலஸ்தீனத்தைப் போன்றே காத்தான்குடி பள்ளிவாசலில் இடம்பெற்ற சம்பவத்தை எம க்கு இலகுவில் மறக்க முடி யாது. பல்லாண்டுகளாக யாழ்ப் பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம் கள் ஒரு சொப்பிங் பேக்குடன் ஒரே நாளில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இவ் வாறு வாழ்ந்தவர்கள் இன்னும் அகதிகளாக முகாம்களில் இரு ந்து வருகின்றனர். இவர்களை நாம் மீண்டும் அவர்கள் வாழ் ந்த சொந்த மண்ணுக்கு திருப்பி அனுப்பவேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்குரியதாகும். கிழக்கை நாங்கள் மீட்ட போது பல்லாண்டுகளாக அனைத்தின மக்களும் வாழ்ந்து வந்த அந்த வாழ்க்கையை மீண்டும் ஏற் படுத்திக்காட்டினோம். இதனால் அங்கு இருக்கும் அனைத்து மக்களும் தற்போது சுதந்திரமாக தமது மத வழிபாடுகளுக்குச் சென்று வர வழி செய் யப்பட்டுள்ளார்கள். ஐ. தே. க. தலைவர் இவற் றையெல்லாம் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
நாற்பதாயிரம் முஸ்லிம்கள் புளிகளினால் மூதூரில் விரட்டியடிக்கப்பட்ட பொழுது நாம் அவர்களை நாற்பது நாட்களுக்குள் மீண்டும் அவர்களை சொந்த மண்ணில் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தினோம்.
இதன் பொருட்டு எம்மோடு உழைத்த அப்பிரதேசத்து அனைத்து முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல பிரமுகர்கள் சேர்ந்து இந்த பணிகளை முன் னெடுத்தோம்.
புலிகளின் கெடுபிடிகளுக்கு மத்தியில் அவர்கள் வெட்டப்பட்டும் கொத்தப்பட்டும் சுடப்பட்டும் உயிரு க்காக இரத்தத்தைச் சிந்திக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அப்பாவி மக்களின் பிள்ளைகள் எவ்வாறுதான் கல்வியைத் தொடர முடியும். மாற்றமாக இப்பிர தேசத்தில் நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கியதன் பொருட்டு இன்று சர்வதேச மட்டத்தில் பாராட்டக் கூடிய வகையில் கல்வியில் கிண்ணியா மாணவி ஒருவர் கலைப்பிரிவு பொதுப் பரீட்சையில் முதல் இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
எமது அரசாங்கம் அரபு நாடுகளுடன் மிக நெருங்கிய தொடர்புகளையும் வைத்துள்ளது. இதன் ஒரு கட்டமாக ஈரான் தேசத்தின் ஜனாதிபதி அஹமதி நிஜாத்துடன் நான் உரையாடிய வேளையில் எமக்கு நாட்டுக்குத் தேவையான பெற்றோலியத்தை வட்டியில்லாமல் 7 மாதங்களுக்கு அதனைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்திருந்தார். அன்று அத்தகையதோர் உதவி எமக்குக் கிடைக்காது போயிருந்தால் நாம் மிகுந்த சிரமங்களுக்குள்ளாக்கப்பட்டி ருப்போம்.
இதே போன்று உமா ஓயாவிற்கு மேலாக பாலமொன்றை நிர்மாணிக்க அந்த நாடு எமக்கு உதவி செய்ததையும், மேலும் கண்டி மாவட்டத்தின் அபிவி ருத்திக்காக நாம் 60,000 மில்லியன் ரூபாவை நாங்கள் ஒதுக்கி இப்பொழுது அபிவிருத்திப் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஸ்ரீல. சு. கட்சியின் ஸ்தாபகர்களுள் ஒருவரான கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத்தை அக்கட்சி கல்வி அமைச்சராக் கியது. இதன் ஊடாக முஸ்லிம் மாணவர்களின் கல்வியில் பாரிய மறுமலர்ச்சியொன்று ஏற்பட்டமையை நாம் அனைவரும் அறிவோம். இத்தகைய ஒரு பதவி வெற்றிடத்தை பெறுவதற்கு இப்பிரதேச மக்கள் தயாராக வேண்டும்.
கண்டி நகரில் முஸ்லிம் ஆண்களுக்கென சகல வளமும் கொண்ட ஆண்கள் பாடசாலையொன்றின் தேவையை நான் உணர்கின்றேன். இச்சந்தர்ப்பத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவும் இருக்கின்றார். இதற்கான அனை த்து பிரயத்தனங்களையும் அரசு மேற்கொள்ளும்.
இப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லும் அதே வேளையில் வடக்கில் உள்ள மாணவர்கள் புத்தகப் பையில் துப்பாக்கிகளையும் கழுத்தில் சயனைட் டையும் மாட்டிக் கொண்டு புலிகளின் முகாம்களுக்குச் செல்கின்றனர். இன்னும் சில நாட்களில் நாங்கள் முல்லைத்தீவை மீட்டதும் அப்பிரதேச பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் அவலங்களை விரைவில் மாற்றிவிடுவோம்.
இந்த வைபவத்தில் அமைச்சர்களான எம். எச். முஹம்மட், ஏ எச்.எம். பெளசி, சுசில் பிரேம்ஜயந்த், ஏ. எல். எம். அத்தாஉல்லா, ரிஷாட் பதியுத்தீன், எம். எஸ். அமீர் அலி, ராஜித்த சேனாரத்ன, ஹுசைன் பைலா, நஜீப் ஏ. மஜீட், ஆளுநர்களான செய்யது அலவி மெளலானா, டிக்கிரி கொப்பேகடுவ மேலும் அல்ஹாஜ் நியாஸ் முஹம்மட், ஏ. எச். எம். அஸ்வர், எஸ். எல். எம். ஹசன் மெளலவி ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா நன்றியுரையை வழங்கினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment