இலங்கையில் ஒரேநேரத்தில் போர்நிறுத்தமும் புலிகள் ஆயுதக் களைவும் வேண்டும்: இந்திய உள்துறை அமைச்சர்
மோதலில் ஈடுபட்டிருக்கும் இலங்கை அரசு சண்டைகளை நிறுத்த வேண்டும் என்றும், விடுதலைப்புலிகள் ஆயுதக் களைவில் ஈடுபடவேண்டும் என்றும் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசு உடனடியாக போரை நிறுத்தவேண்டும், விடுதலைப்புலிகளும் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும், இரண்டுமே ஒரே நேரத்தில் நடக்கவேண்டும் என்று புதுடில்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது சிதம்பரம் கூறினார்.
ஒரு கட்டத்திற்கு மேல் இலங்கை அரசு மீது அழுத்தம் கொடுக்கமுடியவில்லை என்றும் சிதம்பரம் ஒப்புக்கொண்டார்.
துரதிர்ஷ்டவசமாக ஆயுதங்களைத் துறக்குமாறு விடுதலைப்புலிகளை ஒத்துக்கொள்ள வைக்கமுடியவில்லை என்றார் அவர்.
சிதம்பரம் அவர்களின் இன்றைய கருத்து தொடர்பில் புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தெற்காசியவியல் துறை பேராசிரியர் சஹாதேவன் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கில் கேட்கலாம்.
BBC Tamil






0 விமர்சனங்கள்:
Post a Comment