இலங்கை போரில் ராஜீவ் காந்தி குடும்பத்தினர் பழிவாங்கும் நோக்கத்துடன் செயற்படவில்லை
இலங்கைப் போர் தொடர்பில் ராஜீவ்காந்தி குடும்பத்தினர் பழிவாங்கும் நோக்கத்துடன் செயற்படவில்லை என ராஜீவ் கொலை தொடர்பில் கைதாகி வேலூர் சிறையில் உள்ள கைதி முருகன் தெ?வித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக வந்தபோது, தற்கொலைக்குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவரது மனைவியான நளினி, வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு வேலூர் சிறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மகளான பிரியங்கா, நளினியைச் சந்தித்து பேசியுள்ளார். இச்சந்திப்பு தொடர்பில் முருகனுடனான ஊடகவியலாளர்களின் சந்திப்பின்போதே முருகன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வேலூர் ஆண்கள் சிறையில் நேற்று முன்தினம் இசைப்பட்டிமன்றம் நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியை, முருகனும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மற்றொரு கைதியான சாந்தனும் ஒரு ஓரமாக அமர்ந்தபடி கேட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது முருகனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: பெண்கள் சிறையில் இருக்கும் நளினியை கடந்த மார்ச் மாதம் பி?யங்கா சந்தித்தாரே? அப்போது என்ன பேசினார்?
பதில்: ஆமாம் சந்தித்தார். தன் தந்தையின் மரணம் பற்றி பேசியுள்ளார். தனிப்பட்ட விஷயங்களையும் பேசியுள்ளார்.
மேலும் நளினியிடம் நலம் விசாரித்துள் ளார். என்னைப்பற்றியும், என் மகள் அர்ரித்ரா பற்றியும் கேட்டுள்ளார்.
கேள்வி: நளினி தன்னை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி பிரியங்காவிடம் கேட்டாரா?
பதில்: நான் நளினியிடம் அதுபற்றி கேட்டேன். ஆனால், "தன் தந்தையை இழந்துவிட்டு என்னை சந்திக்க வந்தவரிடம் எப்படி நான் கேட்க முடியும்?' என்று நளினி கூறிவிட்டார். எல்லாருக்குமே அவர்களது தந்தை முக்கியமானவர்கள்தான். ஒரு மகளாக அவர் தன்னுடைய தந்தையை இழந்தது அவருக்கும் மிகப்பெரிய பாதிப்புதான். அதனால் அவரிடம் எங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கேட்பது விருந்தாளியிடம் கடன் கேட்பது போன்றது அல்லவா?
கேள்வி: பிரியங்கா உங்களை சந்தித்தாரா?
பதில்: என்னையும் சந்திப்பதாகத்தான் இருந்தது. அதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சிறையில் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அவர் என்னை சந்திக்கவில்லை.
கேள்வி: உங்கள் மகள் எப்படி இருக்கிறார்? அவர் எங்கு இருக்கிறார்?
பதில்: என் மகள் தற்போது லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறார். அடுத்த வருடம் மருத்துவக்கல்லூரியில் சேர்க்கலாம் என்று நினைத்துள்ளோம். ஆனால், அதற்கு செலவுகள் அதிகமாகும். அவள் இங்கிருந்து லண்டன் செல்வதற்கே ரூ.20 இலட்சம் செலவாகியுள்ளது. நாங்கள்தான் இந்த நிலைக்கு ஆளாகி விட்டோம். எங்கள் மகளாவது நன்றாக இருக்க வேண்டும்.
எங்களுக்கு கண்டிப்பாக விடுதலை கிடைக்கப்போவதில்லை. நாங்கள் தற்போது எங்களுடைய குடும்பத்திற்கு சுமைகளாகத்தான் இருக்கிறோம். என்னால் என்னுடைய குடும்பத்திற்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.
அதனால் என்னால் என்னுடைய குடும்பத்திற்கு செய்ய முடியாததை என் மகள் மூலமாக செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. தற்போது என் தம்பிதான் எங்களுடைய குடும்பத்தை தாங்கிக்கொண்டிருக்கிறார்.
கேள்வி: இலங்கையில் நடந்துவரும் போர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: தற்போது இலங்கை போரை பொறுத்தவரை ராஜீவ்காந்தி குடும்பத்தினர் பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படுவதாக கூறப்படுகிறது. ராஜீவ்காந்தி குடும்பத்தினர் அப்படிப்பட்டவர்கள் அல்லர்.
அவர்கள் மனிதாபிமானம் உள்ளவர்கள்.
அந்த குடும்பத்தில் யாரும் அப்படிச் செயல்பட மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.
இந்த போருக்கு ஏதோ ஒரு அரசியல் பின்னணிதான் காரணமாக இருக்கவேண்டும் என்று கருதுகிறேன்.
வியட்நாம் விடுதலைப்போரில் 3 கோடி பே?ல் 25 இலட்சம் பேர் செத்தார்கள்.
அதற்கு பிறகுதான் அவர்களுக்கு விடுதலை கிடைத்தது. அதுபோல் இலங்கையில் உள்ள 50 இலட்சம் தமிழர்களில் 10 இலட்சம் பேராவது சாகவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ? என்று நினைக்க தோன்றுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment