வடமாகாண அபிவிருத்திக்கு இந்தியா உதவி: திட்டங்கள் குறித்து புதுடில்லி ஆலோசனை
வட மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதன்படி வடபகுதியில் வீதி அபிவிருத்தி,மின்சார விநியோகம் உட்பட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகப் புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கையின் வடபகுதியில் எவ்வாறான வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவ முடியுமென்பது குறித்தும் அதற்கான செலவுகள் குறித்தும் இந்திய மத்திய அரசு தற்போது ஆராய்ந்து வருவதாகப் புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்ததும் இந்த உதவிகளை இலங்கைக்கு உடனடியாக வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment