இலங்கையின் உள்விவகாரங்களில் ஐ.நா ஸ்தாபனம் தலையிடக் கூடாதென்று ரஸ்யா தெரிவிப்பு
இலங்கையின் உள்விவகாரங்களில் ஐ.நா ஸ்தாபனம் தலையிடக் கூடாதென்று ரஸ்யா தெரிவித்துள்ளது. ஐ.நா ஸ்தாபனத்தின் பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் ரஸ்யா சார்பாக கலந்து கொண்ட மெக்சின் செர்கின் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது நிலவும் அமைதியற்ற சூழ்நிலை மற்றும் மனித உரிமை விடயங்கள் தொடர்பாக ஐ.நா ஸ்தாபனத்தின் பாதுகாப்பு சபையில் பிரஸ்தாபிப்பதற்கு ரஸ்யா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரத்தைக் கொண்டுள்ள ஐந்து நாடுகளில் ரஸ்யாவும் ஒன்றாகும். பாதுகாப்பு சபையில் சமர்ப்பிக்கப்படும் எந்தவொரு பிரேரணையையும் விசாரணை செய்யவோ அல்லது நிராகரிப்பதற்கோ உறுப்பு நாடுகளுக்கு அதிகாரமிருக்கிறது என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் ரஸ்யா தனது இக்கருத்தை முன்வைத்துள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.






0 விமர்சனங்கள்:
Post a Comment