தப்பியோடுவதா? தற்கொலை செய்வதா?
அப்பாவி மக்களைக் கவசமாக வைத்துக் கொண்டு பயங்கரவாதிகள் வன்னியில் மறைந் துள்ளார்கள். தாம் தப்பியோடுவதா? அல்லது தற் கொலை செய்துகொள்வதா? என்று தீர்மானிக்க முடியாத நிலையில் பிரபாகரன் இருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் புலிகளின் தலைவர் அரசியல் புகலி டம் கோரக்கூடுமெனவும் அவர் நம்பிக்கை வெளி யிட்டுள்ளார்.
பாதுகாப்பு படையினர் எந்த நேரமும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படு த்துவதற்கு தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் பாதுகாப்புச் செய லாளர் தெரிவித்துள்ளார்.
அப்பாவி பொதுமக்களை புலிகள் மனிதக் கேடயங் களாக பயன்படுத்தியிருப்பதே இதற்குக் காரணம். பாதுகாப்பு படையினர் உயிர் தியாகத்துடன் மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக கோத்தாபய ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.
ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு அவர் அளித்த விசேட பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த 10 நாட்களுக்குள் 30 ஆயிரம் பேரை புலிகளிடமிருந்து மீட்டெடுத்திருப்பதாகவும் 50 ஆயிர த்துக்கும் 70 ஆயிரத்துக்கும் இடையிலான மக்களை புலி கள் தடுத்துவைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment