இடம்பெயர்ந்த மக்களுக்கு மாலைதீவு அரசு உதவி
கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்க ளுக்கு மனிதாபிமான அடி ப்படையில் உதவிகளை வழ ங்குவதற்கு மாலைதீவு அர சாங்கம் முன்வந்துள்ளது.
ஒரு தொகையான படு க்கை விரிப்புகள், கூடாரங் கள், அப்பியாசப் புத்தகங்கள், நுளம்பு வலைகள், சப்பாத்து க்கள் மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள் இதில் அடங்கும். மாலைதீவு அரசாங்கம் இலங்கை மக்களுக்கு கடந்த காலங்களிலும் பல்வேறு உதவிகளை வழங்கி வந்துள்ளது.
இந்தப் பொருட்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று இலங்கைக்கான மாலைதீவு உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இலங்கைக்கான மாலைதீவு உயர் ஸ்தானிகர் அலி ஹுசைன் டீடி இந்தப் பொருட்கள் அடங்கிய ஆவணத்தை மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரணை சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் நேற்று வழங்கினார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment