தமிழ் மக்களின் பாதுகாப்பில் புலிகளுக்கும் பொறுப்பு உண்டு
இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருக்கும் கரு த்து இன்றைய நிலையில் எல் லோரும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். புலிகள் ஆயுதங்களைக் கீழே போடும் வரை அவர்களுடன் பேசு மாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத் தும் தார்மீக உரிமை இந்தியாவுக்கு இல்லை என்று அவர் கூறியிருக்கின்றார்.
அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் இராணுவ நடவடிக்கையை இடையில் நிறுத்தப் போவதில்லை என்பது தெளிவாகிவிட் டது.
எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லா மல் அரசாங்கம் இதைத் தெரிவிக்கின்றது. தமிழக அரசியல் கட்சிகள் எவ்வளவு தான் அழுத்தம் பிரயோகித்தாலும் இந்திய அர சாங்கம் யுத்த நிறுத்தக் கோரிக்கையை வலி யுறுத்தும் நிலையில் இல்லை. இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இந்தியா சரியாக விளங்கிக் கொண்டிருப்பதே இதற் குக் காரணம்.
இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கு மிடையே அடிப்படையான பிரச்சினையாக இனப்பிரச்சினையே உள்ளது. இனப் பிரச் சினைக்கான தீர்வு தொடர்பான முரண் பாடுகளே இன்று மோதலாக உருவெடு த்திருக்கின்றன.
இனப்பிரச்சினைக்குத் தீர்வாகத் தனிநாடு அமைப்பதையே புலிகள் இலக்காகக் கொண்டு செயற்படுகின்றனர். இடையிடையே அவர்கள் அரசியல் தீர்வு பற்றிப் பேசினாலும் அது காலத்தைக் கடத்துவதற்கான தந்திரோபா யம். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்து டன் நடத்திய ஆறு சுற்றுப் பேச்சுவார் த்தையிலும் அவர்கள் அரசியல் தீர்வு பற் றிப் பேச விரும்பவில்லை.
தனிநாட்டுப் போராட்டத்துக்கான தயாரிப்புக்கும் கால அவகாசம் பெறுவதற்காகவே அப் பேச்சு வார்த்தையை அவர்கள் பயன்படுத்தினார் கள். எப்படியாவது ஐந்து வருடங்களுக்குப் பேச்சுவார்த்தையை இழுத்தடிக்குமாறு பிரபாகரன் உத்தரவிட்டதாகக் கருணா அம்மான் அண்மையில் கூறியதை இங்கு நினைவூட்டலாம். தனிநாட்டைத் தவிர வேறெந்தத் தீர்வையும் ஏற்கும் நிலையில் புலிகள் இருக்கவில்லை. அரசியல் தீர்வுக் குச் சாதகமாக ஏற்பட்ட சந்தர்ப்பங்களை யெல்லாம் திட்டமிட்டுச் சீர்குலைத்தார்கள்.
அரசாங்கம் தனிநாட்டுக் கோரிக்கையைத் தீவிரமாக எதிர்க்கின்றது. அரசாங்கத்துக் கும் புலிகளுக்கும் இடையிலான பிரதான முரண்பாடு இது.
அதேநேரம், புலிகள் தற் கொலைத் தாக்குதல் மூலமும் கிளேமோர் தாக்குதல் போன்ற தாக்குதல்கள் மூலமும் படையினருக்கும் பொதுமக்களுக்கும் மரணம் விளைவிப்பதை அரசாங்கத்தினால் சகித் துக் கொண்டிருக்க முடியாது.
இந்த நிலையிலேயே மோதல் ஆரம்ப மாகியது. புலிகள் நாட்டுக்கு நிரந்தரமான அச்சுறுத்தல் என்ற புரிகையுடன் அரசாங் கம் இராணுவ நடவடிக்கையை முன்னெடு ப்பதால் இந்த நடவடிக்கையை இடையிலே நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தயா ரில்லை என்பதை இந்திய அரசாங்கம் விள ங்கிக் கொண்டிருக்கின்றது. எனவேதான் யுத்த நிறுத்தக் கோரிக்கையை முன்வைக்கவில்லை.
இந்திய உள்துறை அமைச்சர் கூறியிரு ப்பது போல, புலிகள் ஆயுதங்களைக் கீழே போடுவது தான் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய செயல். ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவதா இல்லையா என்ப தைப் புலிகள் தீர்மானிக்க வேண்டும்.
புலிகளின் தீர்மானம் எவ்வாறானதாக இருப்பினும் மக்களுக்குப் பாதிப்பு ஏற் படாதிருக்க வேண்டியது அவசியம். எங்கி ருந்தென்றாலும் எவ்வளவு அழுத்தங்கள் வந்தாலும் அரசாங்கம் இராணுவ நடவடி க்கையை நிறுத்தப் போவதில்லை.
தோல் வியைச் சில நாட்கள் பின்போடுவதற்காக மக்களைப் பலவந்தமாகத் தடுத்து வைத் துக் கொண்டு சண்டையிடுவதன் மூலம் புலிகள் மக்களைப் பலி கொடுப்பதைத் தவிர வேறு விளைவுகளை எதிர்பார்க்க முடி யாது.
தமிழ் மக்களுக்காகப் போராடுவதாகக் கூறும் புலிகள் அம்மக்களின் பாதுகாப்பில் தங்களுக்குள்ள பொறுப்பை உணர்ந்து சரியான முடிவை எடுக்க வேண்டும்.






0 விமர்சனங்கள்:
Post a Comment