லண்டனில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் விடுதலைப் புலிகளின் பகுதியில் சிக்கியிருக்கும் பொதுமக்களை விடுவிக்க பிரித்தானியாவின் பிரதமர் கார்டன் பிரவுண் அவர்கள், புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரி, இலண்டனிலுள்ள சிங்கள மக்களால் ஒரு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கடந்த முப்பது ஆண்டுகளாக தீவிரவாதத்தின் காரணமாக, இலங்கையில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் மற்றும் பர்கர்கள் ஆகிய அனைத்து மக்களும் பல இன்னல்களை அனுபவித்துள்ளனர் என்றும், பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நடத்திவரும் இராணுவத்துக்கும் தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
போர் நடக்கும் பகுதிகளில் சிக்கி பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு விடுதலைப் புலிகள் தான் காரணம் என்றும், இந்த ஆர்ப்பாட்ட்த்தை நடத்திய பயங்கரவாத்த்துக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.
BBC Tamil
0 விமர்சனங்கள்:
Post a Comment