பாகிஸ்தானில் ஐநா அதிகாரி கடத்தல்
பாகிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் அமைப்பின் மண்டலத் தலைவராகப் பணியாற்றிவந்த வெளிநாட்டவர் ஓருவரை கடத்தல்காரர்கள் கடத்திச்சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை காலை நடைபெற்ற இச்சம்பவத்தில் அவரது கார் டிரைவர் காயமடைந்தார்.
குவெட்டா நகரில் அந்த அதிகாரி தனது அலுவலகத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது இந்தக் கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி காலித் மசூத் தெரிவித்தார். கடத்தப்பட்டவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது உடனடியாகத் தெரியவில்லை என்றார் அவர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment