வடபகுதியில் முஸ்லிம்கள் விரைவில் குடியமர்த்தப்படுவர்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
வடபகுதியிலிருந்து விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட 200,00ற்கும் அதிகமான முஸ்லிம்கள் விரைவில் மீழக்குடியமர்த்தப்படுவார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் திரட்டிருந்த முஸ்லிம்கள் மத்தியில் உரையாற்றும்போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.
பயங்கரவாதிகளால் முஸ்லிம்கள் மாற்றத்துணிகளுடன் மாத்திரம் வெளியேற்றப்பட்டதை நாம் நன்கு அறிவோம். விடுதலைப் புலிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் எந்தவொரு கருத்தையும் தெரிவித்திருக்கவில்லை என்றார் ஜனாதிபதி.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, முஸ்லிம்கள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது தான் முன்வைத்த தேர்தல் வாக்குறுதி தற்பொழுது நிறைவேற்றப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 40 நாட்களுக்குள் முதற்கட்டமாக 40,000 முஸ்லிம்கள் வடபகுதியில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் எனவும், கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு அங்கு சாதாரண நிலைமை ஏற்படுத்தப்பட்டதைப்போன்று வடக்கிலும் சாதாரண நிலைமை விரைவில் ஏற்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி கூறினார்.
அபிவிருத்தியின் பலனைப் பெறுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் கனிந்துள்ளது. பல முஸ்லிம் தலைவர்கள் தமது கட்சியைவிட்டு விலகி எம்முடன் இணைந்துகொண்டுள்ளனர். இளம் அரசியல் தலைவரான பிரதித் தலைவர் பைசர் முஸ்தபா முஸ்லிம் சமூகத்தினருக்குக் கிடைத்த ஒரு அரிய சொத்து என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment