தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்யவேண்டும்
வடக்கு மக்களின் பிரதிநிதிகளெனத் தம்மை அடையாளம் காட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உண்மையிலேயே விடுதலைப் புலிகளின் அரசியல் பிரதிநிதிகளே தவிர தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்லர்.
எனவே புலிகளை தடை செய்தது போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினையும் அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா.வும் அதனுடைய தொண்டர் அமைப்புகளும் இலங்கையின் அந்தரங்க விடயங்களில் அநாகரீகமாக தலையிடுகின்றன. யுத்தத்தை நிறுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இவர்கள் கூறுவது புலிகளை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்ற மேற்கொள்ளும் முயற்சியாகும் என்றும் அவர் கூறினார்.
தேசிய சுதந்திர முன்னணியின் விஷேட செய்தியாளர் மாநாடு இன்று வியாழக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையலுவலகத்தில் நடைப்பெற்றபோதே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது: புலி பயங்கரவாதிகளை இராணுவ நடவடிக்கை மூலம் வெற்றி பெறும் இறுதி தருணத்தில் உள்ள இலங்கை அரசாங்கத்தை, ஐ.நாவும் அதனுடைய தோழமை அமைப்புகளும் பொதுமக்களை காரணம் காட்டி புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்த வலியுறுத்துவது முறைகேடானது.
உண்மையிலேயே பொதுமக்களை பாதுகாக்க யுத்தநிறுத்தம் தேவையில்லை. மாறாக விரைவான பாரிய இராணுவ நடவடிக்கையே ஒரே வழியாகும்.
செச்சினிய பயங்கரவாதிகள் ரஷ்யாவில் பாடசாலை மாணவர்களை பணயக் கைதிகளாக வைத்துக்கொண்டு யுத்தம் செய்கையில் அப்போதைய ரஷ்ய அரசாங்கம் யுத்தநிறுத்தம் செய்யவில்லை. பாரிய இராணுவ நடவடிக்கை மூலம் மாணவர்களை மீட்டதுடன் பயங்கரவாதத்தையும் வெற்றி கொண்டது. இலங்கைக்கும் இச்சம்பவம் நல்லதொரு முன்னுதாரணமாகும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment