ஓமந்தை வரை ‘யாழ்தேவி’
கொழும்புக்கும்-வவுனியாவுக்குமிடையில் தற்போது இடம்பெற்று வரும் யாழ்தேவி ரயில் சேவையை ஓமந்தை வரை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ரயில்வே பொறியியலாளர் குழுவொன்று ஓமந்தைக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளது. அனுராதபுரத்திலிருந்து சென்ற பொறியிலாளர்கள், ஓமந்தை ரயில் பாதையில் நிலவும் குறைபாடுகளை அவதானித்து அறிக்கையொன்றைச் சமர்ப்பித்துள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரியொருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
தற்போது ஓமந்தை வரை பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அதுவரை ரயில் சேவையை நீடித்து, பின்னர் காங்கேசன்துறை வரை நீடிப்பது குறித்து ஆராயப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 விமர்சனங்கள்:
Post a Comment