பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு மற்றும் புலிகளுக்கு இந்திய ஜனாதிபதி வேண்டுகோள்.
சண்டையை கைவிட்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்பும்படி இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கோரிக்கை விடுத்தார் குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டீல்.
நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இன்று அவர் ஆற்றிய உரையில் இலங்கைப் பிரச்சனை குறித்து இவர் கூறியதாவது:
இலங்கையில் நாளுக்கு நாள் தீவிரமாகிவரும் சண்டை காரணமாக சொந்தநாட்டு மக்களே பாதுகாப்பு தேடி புகலிடம் தேடும் வேதனை நடக்கிறது. இதை நிறுத்த அரசும் விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தைக்கு திரும்பவேண்டும். இருதரப்பும் ஓரே சமயத்தில் சண்டையை கைவிட்டால் பேச்சுவார்த்தை நடைபெற சாத்தியம் ஏற்படும். ஆயுதங்களை கைவிடுவதாக விடுதலைப்புலிகள் அறிவிக்கவேண்டும்.
புpளவுபடாத இலங்கை என்ற வகையில் தமிழர்கள் உள்பட அனைத்து இனத்தவரும் ஏற்கக் கூடியவகையில் பேசித்தீர்வு காணவேண்டும் ஏன்பதே இந்தியாவின் நிலை. இதில் மாற்றம் இல்லை என்றார் பிரதிபா.
0 விமர்சனங்கள்:
Post a Comment