வன்னி யுத்தத்தில் சிக்கியிருக்கும் மக்களின் பாதுகாப்பை இருதரப்பினரும் உறுதிப்படுத்த வேண்டும் : பரிசுத்த பாப்பரசர் வேண்டுகோள்

வன்னிப் பகுதியில் யுத்தத்தில் சிக்கியிருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பினரிடமும் பரிசுத்த பாப்பரசர் 16ஆவது பெனடிக்ற் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்: "இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தம் அதி தீவிரமடைந்து, பொதுமக்கள் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருக்கும் இந்த வேளையில்,
யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் இரு பகுதியினரையும் வேண்டிக்கொள்வது யாதெனில், மனிதாபிமான முறைமைகளை மதித்து மக்கள் சுதந்திரமாக நடமாடவும் காயப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வேண்டும் என்பதைத்தான்.
இம்மக்களுக்குத் தேவையான மருத்துவ சேவைகளை வழங்கவும், அத்தியாவசிய உணவு போன்றவற்றைப் பெற்றுக் கொள்வதற்கும் ஆவன செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment