காதல் ஜோடியுடன் நாகபாம்பும் பயணம்
காதல் ஜோடியொன்று பயணம் செய்தகாரில் நாகபாம்பொன்றும் பயணம் செய்து அந்த ஜோடியை பெரும் கிலி கொள்ள வைத்துள்ளது.
அநுராதபுரம் கலாவௌ பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
தனது தந்தையின் காரை எடுத்து வந்த காதலி தனது காதலனுடன் கலாவௌ குளப் பகுதிக்கு அந்தக் காரில் சென்றுள்ளார்.
காதலி காரை செலுத்திச் சென்ற போது காதலன் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். கார் பயணத்தின் போது அடிக்கடி "உஷ் உஷ்' என்ற சத்தம் கேட்டுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த காதலி, தனது ஆசனத்தின் மேல் பக்கம் திரும்பிப் பார்த்த போது நடுநடுங்கிப் போய் விட்டார்.
தனது ஆசனத்திற்கு மேலே நாகபாம்பொன்று படமெடுத்தவாறு நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், காரை நிறுத்திவிட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியே பாய்ந்து விட்டார்.
பின்னர் அவரது காதலனும் காரிலிருந்து இறங்கி அப்பகுதி மக்களின் உதவியுடன் காரிலிருந்து பாம்பை விரட்டியுள்ளனர்.
இதன் பின் காரைச் சோதனையிட்ட போது சாரதி ஆசனத்திற்கு கீழே எலிப்பொந்தொன்று இருந்துள்ளது. எலிகளைப் பிடிக்க வந்த பாம்பே காதல் ஜோடியுடன் சேர்ந்து பயணம் செய்த போது, கார் சென்ற வேகத்தால் வெகுண்டு சாரதி ஆசனத்திலேறியுள்ளது.
எனினும் தெய்வாதீனமாக இந்தக் காதல் ஜோடி அந்தப் பாம்பிடமிருந்து தப்பியுள்ளது.






0 விமர்சனங்கள்:
Post a Comment