இலங்கை பிரச்சினை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும் என ஐ.நா, அமெரிக்க வலியுறுத்தல்
இலங்கை சமூகத்தில் மேலும் பொதுமக்கள் கொல்லப்படுவதை தடுக்கும் முகமாக அவசரத்தேவையாக பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ முன் கோரியுள்ளார்.
விடுதலை புலிகளும் , இலங்கை அரசாங்கமும் மோதல்களை நிறுத்தி, மோதல்களில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற உதவ வேண்டும் எனவும் ஐ.நா செயலாளர் பான் கீ மூன் அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் அனைத்து தரப்பினரும் அரசியல் தீர்வு ஒன்றுக்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் பான் கீ மூன் குறிப்பிட்டார்.
அதேவேளை இலங்கையின் வடக்கே மோதல்கள் காரணமாக அதிகளவில் பொதுமக்கள் பலியாவதால் இதற்கு தீர்வு எட்டப்படுவதை அமெரிக்கா விரும்புவதாக இராஜாங்க திணைக்கள பதில் பேச்சாளர் ரொபேர்ட் வூட் தெரிவித்துள்ளதாக பிரிஐ தெரிவித்துள்ளது.
"மோதல்கள் முடிவிற்கு வருவதை நாம் விரும்புகின்றோம்.இம் மோதல்களில் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நாங்கள் இம்மக்களிற்கான மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்திற்கொண்டுள்ளோம்.இடம்பெயர்ந்த மக்கள் குறித்து அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது குறித்தும்,மோதல்களில் சிக்கியுள்ள மக்கள் கவலைப்படுகின்றோம்." என இராஜாங்க திணைக்கள பதில் பேச்சாளர் ரொபேர்ட் வூட் மேலும் தெரிவித்துள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment