ஒபாமாவுக்கான தமிழ் மக்கள் அமைப்பு கிளிண்டனுக்குக் கடிதம்
இலங்கையில் இடம்பெறும் மோதல் சம்பவங்களை முடிவுக்குக் கொண்டு வந்து நிரந்தர சமாதானம் ஒன்றை தோற்றுவிக்க உதவ வேண்டும் என அமெரிக்காவில் வாழும் ஒபாமாவுக்கான தமிழ் மக்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுக்கு அனுப்பி வைத்துள்ள ஒரு கடிதத்தில் தற்போதைய ஜனாதிபதி ஒபாமாவுக்கு இந்த விடயத்தில் அறிவுரை கூறுமாறும் கேட்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இலங்கை பிரச்சினைக்கு சுமுகமான தீர்வொன்றை எட்ட முடியும் என தமிழ் சமூகம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழ் மக்கள்மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அகதிகளாக வருவோரை நலன்புரி முகாம்கள் என்ற போர்வையில் தடுத்து வைத்துள்ளதாகவும் மேற்படி அமைப்பு தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.






0 விமர்சனங்கள்:
Post a Comment