ராமேஸ்வரம் பகுதியில் தொடர்ந்து கரை ஒதுங்கும் இலங்கை படகுகள்
ராமேஸ்வரம் கடலோரப் பகுதியில், இலங்கை படகில் மர்ம நபர்கள் வந்து செல்வதும், கரை ஒதுங்கி கேட்பாரற்றுக் கிடக்கும் படகை, போலீசார் கைப்பற்றுவதும் வழக்கமாக உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன், சேரான்கோட்டை கடற்கரையில், ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கரையில் ஒதுங்கிய இலங்கை படகை, போலீசார் கைப்பற்றினர். தனுஷ்கோடி கடல் மணல் திட்டில் நின்ற படகையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை நரிக்குழி கடற்கரை பகுதியில் அனாதையாக நின்ற படகை, இந்திய கடற்படையினர் கைப்பற்றி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.நடுக்கடலில் மீன் பிடித்து திரும்பும் போது, ராமேஸ்வரம் நோக்கி அதிவேகத்தில் பைபர் படகு ஒன்று வந்ததைப் பார்த்ததாக, நேற்று கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment