ஒபாமாவைத் தெரியாதாம்
போதைப் பொருள் வைத்திருந்ததாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஒன்றுவிட்ட சகோதரர் மாற்றாந் தாயின் மகன் கென்யா நாட்டில் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தந்தை கென்யா நாட்டைச் சேர்ந்தவர்.
இவரின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர் ஜோர்ஜ் உசேன் ஒபாமா.
இவர் மரிஜுவானா என்ற போதைப் பொருள் வைத்திருந்ததாக கென்யாவின் நைரோபி நகரில் உள்ள ஹருமா குடிசைப் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
இங்கு தான் இவர் வசித்து வருகிறார் என்பது குறி ப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட ஜோர்ஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என பொலிஸார் கூறியுள்ளனர்.
ஹருமா பகுதியில் மெக்கானிக்காக பணியாற்றி வரும் ஜோர்ஜ் ஒபாமாவுக்கு தன் சகோதரர் ஜனாதிபதி பராக் ஒபாமாவைப் பற்றி அதிகம் தெரியாது.
0 விமர்சனங்கள்:
Post a Comment