ஈராக்கில் வைக்கப்பட்ட சப்பாத்து சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டது
ஈராக்கில் புஷ் மீது வீசப்பட்ட சப்பாத்தின் நினைவாக அமைக்கப்பட்ட சப்பாத்துச் சிலையை அந்நாட்டுப் பொலிஸார் அகற்றியுள்ளனர்.
கடந்த டிசம்பரில் ஈராக் வந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி புஷ் மீது பத்திரிகையாளர் ஒருவர் தனது சப்பாத்துகளைக் கழற்றி வீசினார். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதியும் மரண தண்டனைக்கு உள்ளானவருமான சதாம் ஹூசைனின் சொந்த ஊரான திக்ரித் நகரில் இந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் சிலர் சப்பாத்துச் சிலையை அமைத்தனர். இச்சிலை கடந்தவாரம் திறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அரசு நடத்தும் அநாதை இல்லத்துக்குச் சொந்தமான இடத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளாதாகவும் அதனை அகற்றுமாறு பொலிஸார் கூறியும் சிலை அகற்றப்படவில்லை.
இதனையடுத்து பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை அந்தச் சிலையை அகற்றி அதற்கான பீடத்தையும் இடித்தனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment