புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதிகளில் நேற்று மட்டும் 58 பேர் பலி; 84 பேர் காயம்
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் சுதந்திரபுரம் பகுதிகளில் நடத்தப்பட்ட ஷெல் மற் றும் பீரங்கிக் குண்டுத் தாக்குதல்களில் நேற்று மட்டும் 58 பேர் கொல்லப்பட்டனர்; 84 பேர் காய மடைந்துள்ளனர் என்று இணையத் தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொல்லப்பட்டவர்களில் பிஞ்சுக்குழந்தைகள் இரண் டும் அடங்குகின்றன.
பீரங்கித் தாக்குதல்கள் தொடர்வதால் காயமடைந்தவர் களை காப்பாற்றும் நடவடிக்கைகளும் சரிவர இடம் பெறவில்லை. இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக் கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் வீதிகளிலும் வளவுகளிலும் சிதறிக்கிடப் பதாகவும் அவை ஆங்காங்கே அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன என்றும் இணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது நேற்றுப் பிற்பகல் குறைந்தது இரண்டு தடவைகள் பீரங்கித் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. பிற்பகல் 5.30 மணிக்குப் பிறகு இடம்பெற்ற இத் தாக்குதல்களில் சத்திர சிகிச்சைப் பிரிவு பலத்த சேதம டைந்தது. உயிர்ச்சேதங்கள் குறித்த விவரம் தெரியவில்லை. உடையார்கட்டு மருத்துவமனையில் நேற்று 12 சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அங்கு பீரங்கித் தாக்குதலில் காயமடைந்த 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சுதந்திரபுரம் மருத்தவமனையில் நேற்று 10 சடலங்கள் கையளிக்கப்பட்டன. அங் கும் பீரங்கித் தாக்குதலில் காயமடைந்த 44 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற மீட்புப் பணிகளில் மொத்தம் 55 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டது.
பீரங்கித் தாக்குதலில் ஏவப்படும் குண்டுகள் பட்டதை எல்லாம் எரிக்கும் தன்மையுடையவையாகவே காணப்படுவதாகவும் படையினர் புதுவகை எரிகுண்டுகளை பயன்படுத்துகின்றனரோ என்ற சந்தேகம் எழுவதாகவும் இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment