வன்னியில் தங்கியுள்ள மக்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகிறது
விடுதலைப்புலிகளின் பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேறுகிறார்களோ இல்லையோ அவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படுவதைத்தவிர்ப்பது முக்கியமானது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் பேச்சாளர் கோர்டன் வெய்ஸ் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
புதுக்குடியிருப்பு மருத்துவமனை கடந்த திங்கட்கிழமை ஷெல் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் பெண் தாதியொருவர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.இந்த ஷெல் எங்கிருந்து வந்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை. எனினும் இதனால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து இரு தரப்புகளுக்கும் தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனால் இன்னமும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை.புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியில் 600 நோயாளர்கள் மருத்துவமனையில் 600 நோயாளர்கள் உள்ளனர். இது தவிர பலர் எந்த நேரத்திலும் காயத்துடன் வருகின்ற நிலைமை. இவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாதுள்ளது.
இவ்வாறு காயப்பட்டவர்களை மீண்டும் அரச கட்டுப்பாட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது குறித்து செஞ்சிலுவைக்குழு ஆராய்ந்து வருகின்றது.
மோதல் நடைபெறும் பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாப்பதே எமது முக்கிய முன்னுரிமைப் பணியாகும். மனிதாபிமான உதவிகளுக்கும் உணவு,மருந்து போன்றவற்றைக் கொண்டு செல்வதற்குமே முன்னுரிமை அளிக்கின்றோம். இன்னமும் நான்கு மருத்துவமனைகள் உள்ளன. அவற்றில் போதியளவு மருந்துகள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டியுள்ளது.
பத்து பதினைந்து தடவைகள் இடம்பெயர்ந்துள்ளனர். பலர் 10,15 தடவைகள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்குப் போதிய தங்குமிடங்களோ, உணவோ இல்லை. மருத்துவ நிலையங்கள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளன. கடந்த சில வாரங்களில் மட்டும் காயப்பட்டவர்கள் ஏராளமானோருக்கு அங்குள்ளவர்கள் சிகிச்சையளிக்கவேண்டி ஏற்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களில் அதிகமானவர்கள் கொல்லப்பட்டமையை ஐக்கிய நாடுகளின் பணியாளர்கள் கண்டுள்ளனர். இலங்கையில் மோதல் நடைபெறும் பகுதியொன்றில் மக்கள் சிக்குப்பட்டுத் தப்ப முடியாமல் இருந்தமை இதுவே முதல் தடவை.
பொதுமக்கள் விடுதலைப் புலிகளின் பகுதிகளிலிருந்து வெளியேறுகிறார்களோ இல்லையோ சர்வதேச மனிதாபிமான சட்டம்,யுத்த சட்டத்தின்படி அவர்களுக்கு உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தும் நடவடிக்கையை இருதரப்பும் தவிர்க்கவேண்டும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment