"மோதல்கள் காரணமாக புலம் பெயர்ந்தவர்கள் நாடு திரும்ப வேண்டும்" சுதந்திரதின உரையில் ஜனாதிபதி கோரிக்கை
இலங்கையின் 61ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை 8.30 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகின. காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வுகளின் போது ஜனாதிபதி தேசிய கொடியினை ஏற்றி வைக்க பாடசாலை மாணவிகளால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அத்துடன் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த அனைவரிற்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களிற்கு உரையாற்றினார்.
இங்கு உரையாற்றும் போது ஜனாதிபதி தெரிவித்ததாவது,"இன்று நாம் உள்நாட்டில் உள்ள எதிரிகளை தோற்கடிக்கும் திறனினைப் பெற்றுள்ளோம். இலங்கையின் வடக்கே இராணுவ வீரர்கள் வெற்றிகளை பெற்று தேசிய கொடிகளை நாட்டியுள்ளனர். அத்துடன் வரலாற்றில் இம்முறை சுதந்திர தினத்தின் போது நாடுபூரகவும் தேசியக் கொடியினை மக்கள் பறக்கவிட்டுள்ளனர்." என ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன் , நாட்டில் நிலவிய பயங்கரவாதம் தற்போது ஒழிக்கப்பட்டு, நாடு முழுமையாக சுதந்திரமடைந்து வரும் நிலையில் உள்நாட்டு மோதல்கள் காரணமாக புலம் பெயர்ந்து சென்ற அனைவரும் நாடு திரும்ப வேண்டுமென ஜனாதிபதி தனது சுதந்திரதின உரையில் கோரிக்கை விடுத்துள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்முறை தனது சுதந்திரதின உரையில் இரண்டு வசனங்கள் தமிழிலும் ஆற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment