இது எப்படி இருக்கு?
23 வயது இளைஞர் ஒருவரை 3 யுவதிகள் கடத்திச் சென்று தொடர்ந்து 4 நாட்களாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் இடம்பெற்றுள்ளது.
தமது தேவையைப் பூர்த்தி செய்த மேற்படி யுவதிகள், மயக்க நிலையிலிருந்த கலீல் என்ற மேற்படி இளைஞரை கயுமாபாத் ஆற்றங்கரைக்கு அருகே வீசிவிட்டு சென்றுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை உணவகமொன்றில் உணவு பரிமாறுபவராக பணியாற்றி வந்த கலீலை அணுகிய இனந்தெரியாத நபரொருவர், உணவகத்துக்கு வெளியே காரில் அமர்ந்துள்ள யுவதிகளுக்கு உணவு பரிமாறும்படி பணித்துள்ளார்.
அதனையடுத்து கலீல் காரிலிருந்த யுவதிகளிடம் உணவை எடுத்துச் சென்றுள்ளார். இதன்போது அந்த யுவதிகள் தினசரி தமது வீட்டுக்கு உணவை எடுத்து வரும் படி கலீலைக் கோரியதுடன் தமது வீடு எங்கேயிருக்கிறது என்பதை காண்பிக்க, தம்முடன் அவரை காரில் வரும்படி பணித்துள்ளனர்.
வீட்டை அடைந்ததும் அந்த யுவதிகள் கலீலுக்கு மயக்க மருத்து கலந்த பாலை அருந்தக்கொடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து அவர் மயங்கி விழுந்துள்ளார். மீண்டும் மயக்கம் தெளிந்து எழுந்தபோது மேற்படி யுவதிகளால் தான் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுவதை உணர்ந்தார். அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க அவர் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை.
நான்கு நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் ஆற்றங்கரையில் கைவிடப்பட்ட கலீலின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கராச்சி நகர உதவி பொலிஸ் அதிகாரி அஸாத் ரஸா தெரிவித்தார்.
மேற்படி யுவதிகள் மூவரும் கராச்சியின் கிலிப்டன் பகுதியில் வாழும் செல்வந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிய அஸாத் ரஸா, இது தனது வாழ்நாளில் சந்தித்திராத மிகவும் சிக்கலான வழக்காக உள்ளது என்று கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment