புலிகளுக்கு ஆதரவில்லை: முதல்வர்
இலங்கை தமிழர்களுக்காக மத்திய ஆட்சியிலிருந்து விலக மாட்டோம்; மாநில அரசையும் இழக்க மாட்டோம்; திமுகவை பொறுத்தவரை இலங்கை தமிழர் பிரச்சனை தான் முக்கியம்; பிரபாகரனையோ மற்ற தமிழர் தலைவர்களையோ ஆதரிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். இந்த பிரச்சனையில் ராமதாஸ், ஜெயலலிதா போன்றவர்களின் சதிச் செயல்களுக்கு ஆளாக மாட்டோம் என்றும் கருணாநிதி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
.
சென்னையில் இன்று நடைபெற்ற திமுக செயற்குழுவில் முதலமைச்சர் கருணாநிதி பேசியதாவது: இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து திமுக கடந்த பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறது. அதற்காக வாதாடியும், போராடியும் வருகிறது. என்றும் இந்த நிலையில் தொடர்வோம்.
இப்போது தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்காக புதிய குரல் கிளம்பி இருக்கிறது. 1956 ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக பல்வேறு தலைவர்கள் தமிழ்நாட்டை நாடி வந்திருக்கிறார்கள். அப்போது தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் பெரியார், அண்ணா, நான் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார்கள்.
அதனடிப்படையில் அவர்களுக்காக குரல் கொடுத்துள்ளோம். அதனை தொடர்ந்து 198384 கால கட்டத்தில் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்டோர் கொடூரமான படுகொலைக்கு ஆளாகி சிங்கள ராணுவத்தின் தமிழர் அழிப்பு நடவடிக்கை நடந்தது.
அப்போது மீண்டும் அமிர்தலிங்கம் தமிழகத்திற்கு வந்து ஆதரவு கோரினார். தமிழனுக்கு தமிழன் உதவி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தோம். அதன் பின்னர் விடுதலைப் போராட்ட இயக்கங்கள் தோன்றின.
அவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து போராடியிருந்தால் அவர்கள் விரும்பியபடி தமிழீழம் என்றைக்கோ மலர்ந்திருக்கும். ஆனால் பிரபாகரனை ஒரு சர்வாதிகாரியாக ஏற்றுக் கொள் பவர்கள் மட்டுமே அங்கு செயல்பட முடியும் என்ற நிலை அங்கே உருவானது. இதனை தொடர்ந்து பலர் அழித்தொழிக்கப்பட்டனர்.
திமுகவை பொறுத்தவரை இலங்கை தமிழர்களுக்காகத்தான் எங்களுடைய குரல் ஒலிக்கும். பிரபாகரனையோ அல்லது எந்த தனிப்பட்ட தமிழர் தலைவர்களையும் நாங்கள் ஆதரிக்க வில்லை.
புலிகளின் நடவடிக்கைகளை ஏற்காமல் முகுந்தன், கருணா உள்ளிட்ட பலர் வெளியேறி இருக்கிறார்கள். இப்படி சகோதர யுத்தம் போன்ற கொடுமை களை நாங்கள் மறப்பதற்கு காரணம் அங்குள்ள தமிழர்கள் உரிமை பெற்று வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து பத்திரிகையின் ஒரு சகோதர இதழான பிரண்ட்லைன் இதழில் பிரபாகரனின் அட்டைப் படம் போட்டு ஒரு பேட்டியை வெளியிட்டி ருந்தார்கள்.
அதனை கண்டு நான் திடுக்கிட்டுப்போனேன். என் விழிகள் ஆச்சரியத்தால் விரிய அதனை பார்த்தேன். அதில் ஒரு கேள்வி பிரபாகரனிடம் கேட்கப்பட்டது. நீங்கள் வெற்றி பெற்றால் உங்கள் ஆட்சி எப்படி இருக்கும் என்பதே அந்த கேள்வி. அது சர்வாதிகார ஆட்சியாக இருக்கும் என்று பிரபாகரன் பதிலளித்திருந்தார். அப்போதே அவர்களுடைய போராட்டம் புளித்துப் போய் விட்டது.
சகோதர யுத்தம் நடத்திய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக் கான ஆதரவு குறைந்தும், மறைந்தும் போனது. ஆனால் இன்று பச்சை குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட இலங்கை தமிழர்கள் கொல்லப்படு கிறார்கள். தாய்மார்கள் இழிவுப் படுத்தப்படுகிறார்கள். இதனை தாங்காமல் கதறி அழும் அவர்கள் தமிழகம் நம்மை காப்பாற்றாதா என்று அவலக் குரல் எழுப்புகிறார்கள்.
அதற்கு நாம் உதவ வேண்டாமா என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த கூட்டத்தை இன்று நாம் கூட்டியிருக்கிறோம்.
ஆதரவு என்றால் ஆயுதமேந்தியோ, போர் தொடுத்தோ ஆதரவை அளிக்க முடியாது. தமிழக சக்தியை ஒன்று திரட்டுவதன் மூலமாகவே ஆதரவை அளிக்க முடியும். ஜனநாயக ரீதியில் தான் அந்த சக்தியை நாம் திரட்ட முடியும்.
அந்த வகையில்தான் இன்றைக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டி ருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகள் ஏதோ தாங்கள்தான் இலங்கை தமிழர்களின் பிரதிநிதி களைப் போல காட்டிக் கொள் கிறார்கள். நாம் இலங்கை தமிழர் களுக்கான போராட்டத்தை கைவிட்டு விட்டது போல பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். முதலமைச்சர் தலைமை யில் எல்லோரும் போராட்டம் நடத்துவோம் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார். எதற்கு சொன்னார் என்று இன்றுதான் புரிகிறது.
எனக்கும், மத்திய அரசுக்கும் விரோதத்தை ஏற்படுத்தி இவர் செல்வாக்கை பெருக்கிக் கொள் வதற்காக இந்த செயலில் ராமதாஸ் ஈடுபட்டிருக்கிறார். அவர் ஆதரவு பத்திரிகைகள் மூலமாக இந்த செய்திகளை அவர் பரப்பி வருகிறார்.
இன்று கூட நாம் ஆட்சியை கலைத்து விட்டு வெளியேறி விடுவோம் என்று ஒரு பத்திரிகை ஆசையோடு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு திமுக ஆட்சி போய் விடும்; அடுத்த ஆண்டு அதிமுக ஆட்சி ஏற்படும் என்று ஜெயலலிதா சொல்வதற்கு காரணம், இலங்கை தமிழர்களுக்காக போராட்டம் நடத்தி மத்தியில் திமுக ஆதரவை வாபஸ் பெற்று விடும்.
இங்குள்ள ஆட்சியை கலைத்து விட்டு வெளியேறி திண்ணை காலியாகி விடும். நாம் வந்து படுத்துக்கொள்ளலாம் என்று அவர் கனவு காண்கிறார்.
அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் உங்களை நம்பி சொல்கிறேன். இந்த அண்ணன் சாக மாட்டான்; திண்ணையும் காலியாகாது என்று அவர்களுக்கு உணர்த்தும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும்.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களோடு பேசக் கூடியதும், அவர்கள் மீது பற்றும்,பாசமும் வைக்கக் கூடிய ஒரே கட்சி திமுகதான். வேறு யாருக்கும் அந்த உரிமை இல்லை.
இலங்கை தமிழர்களை காப்பாற்ற புறப்படுவது போல சிலர் நாடகமாடுகின்றனர். அவர்களை பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல நாம் எப்படி செயல்படுவது என்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தை ஏற்று நீங்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக செயற்குழுவில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Maalaisudar
0 விமர்சனங்கள்:
Post a Comment