சீன பிரதமர் மீது ஷூ வீச்சு
சீன பிரதமர் வென் ஜியாபோ பிரிட்டனில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் மீது ஷூவை வீசி தாக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் ஈராக் சென்றிருந்த போது அவர் மீது பத்திரிகையாளர் ஒருவர் தனது ஷூவை வீசி எறிந்து தாக்குதல் நடத்தினார்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சீன பிரதமர் வென் ஜியாபோ மீதும் ஷூ வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிரிட்டனில் உள்ள பல்கலைக்கழகம் உன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வென் ஜியாபோ உரையாற்ற எதிர்ப்பு தெரிவித்த நபர், சர்வாதிகாரி ஒருவரை எப்படி பேச அழைக்கலாம் என்று கோஷம் எழுப்பியபடி தனது ஷூவை அவர் மீது வீசி எறிந்துள்ளார்.
ஆனால் அந்த ஷூ ஜியாபோ மீது படாமல் சென்று விழுந்தது. உடனே அதிகாரிகள் அந்த ஷூவை அகற்றினார்கள்.
சீன பிரதமர் மீது ஷூவை வீசிய நபரை உடனே அதிகாரிகள் அழைத்துச் சென்று விட்டனர். அவர் யார் என்பது பற்றி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
0 விமர்சனங்கள்:
Post a Comment