மரங்களிலும் வீதிகளிலும் மனித மாமிசங்கள் சிதறி காணப்படுகிறது – வன்னி சென்று திரும்பியுள்ள மதகுரு
வன்னியில் மக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகளை நோக்கி இலங்கை படையினர் தொடர்ந்தும் எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டு வருதாகவும் விசேடமாக புதுக்குடியிருப்பு – பரந்தன் வீதியில் வழியாக அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலய பகுதிக்கு செல்வது மிகவும் ஆபத்தான பயணம் எனவும் வன்னிக்கு சென்று நேற்று முன்தினம் திரும்பியுள்ள மதகுரு ஒருவர் தெரிவித்துள்ளார்.
வீதியில் காணப்படும் மரங்களிலும் வீதிகளிலும் மனித மாமிசங்கள் சிதறி காணப்படுகிறது. பாதுகாப்பு வலய பகுதிகளை நோக்கி மக்கள் வெள்ளம் சென்று கொண்டிருகிறது. மக்கள் கடும் வெயில் மற்றும் மழையிலும் மரத்தடிகளில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான உணவு இல்லை. சில மக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உணவு களஞ்சியத்தை உடைத்து உணவு பொருட்களை எடுத்துகொண்டுள்ளனர்.
பலர் கடுமையான பட்டினியில் வாடுகின்றனர்.அதேவேளை பாதுகாப்பு வலய பகுதியை நோக்கி தள்ளப்படுவது காட்டுமிரண்டித்தனமான நடவடிக்கை, பாதுகாப்பு வலய பகுதிக்கு செல்லும் அகதிகளுக்கு அரசாங்க அதிகாரிகள் உணவுப் பொருட்களை விநியோகித்து வருகின்றனர்.இதேவேளை இராணுவம் மேற்கொண்ட கடுமையான எறிகணை தாக்குதல்களில் 300 பேர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்ததை தன் நேரில் கண்டதாக வன்னி சென்று திரும்பிய மத போதகர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து இடங்களிலும் பெரும் எண்ணிக்கையிலான சடலங்கள் கிடக்கிறது. சடலங்களை எடுத்து அப்புறப்படுத்த எவரும் இருக்கவில்லை அனைவரும் தாக்குதல்கள் காரணமாக பதுங்குகுழிகளுக்கு சென்று பதுங்கியுள்ளனர். எவரும் வெளியில் வருவதில்லை. மூன்று வாரங்கள் அங்கு தங்கியிருந்தது மிகவும் பயங்கரமான ஒரு அனுபவதாக இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு அந்த அனுபவங்களில் இருந்து இன்னும் மீள முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மக்கள் தமது குடியிருப்பாக பதுங்கு குழிகளையே பயன்படுத்தி கொள்கின்றனர். சிறிய துண்டு ரொட்டியையும் தேனீரையுமே அவர்கள் உணவாக அருந்துகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் நான் மெனிக்பாம் பிரதேசத்திற்கு விஜயம் செய்தாகவும் அங்கு தங்கியுள்ள மக்களின் நிலைமை மிகவும் அனுதாபத்திற்குரியது. இந்த மக்கள் சிறை கைதிகளை போல் நடத்தப்படுகின்றனர். இந்த மக்களுக்கு வழங்கப்படும் உணவுகளை அவர்கள் உண்கின்றனர். இதனால் கடும் வயிற்றுளைவு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இங்கு தங்கியுள்ள மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் குளிப்பதற்கான ஆற்றுக்கு போகிறார்கள். அவர்கள் குளிக்கும் போது ஏழு அல்லது எட்டு இராணுவத்தினர் அவர்களுடன் காணப்படுகின்றனர். பெண்கள் குளிக்கும் போது ஆண்களான இராணுவத்தினர் அவர்களை கண்காணிக்கின்றனர்.
அந்த பெண்களுக்கு அது மிகவும் கொடுரமான குளியல், அதேவேளை நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள குழந்தைகளில் பலருக்கு எந்த கல்வி வசதிகளும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. தகரத்தினால் அமைக்கப்பட்ட சிறிய அறைகளில் இங்குள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெப்பமான நேரங்களில் அதில் தங்கியுள்ள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனை தவிர போதுமாளவு சவர்க்காரம் கொடுக்கப்படுவதில்லை, குழந்தைக்கான உரிய பால் மா வகைகள் கொடுக்கப்படுவதில்லை. அதேவேளை வவுனியாவில் உள்ள நெலுக்குளம் முகாமுக்கும் நான் விஜயம் செய்தேன், அங்கு மக்கள் சிறிய அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறைக்கைதிகள் போல் நடத்தப்படுகின்றனர்.
அவர்களை பார்ப்பதற்கு எவரும் அனுமதிக்கப்படுவதில்லை. முகாமை சுற்றி இராணுவத்தினர் குவிந்துள்ளனர். இங்குள்ள மக்களுக்கு சில அரசசார்பற்ற நிறுவனங்கள் உதவிகளை வழங்கிய போதும், இந்த உதவி பொருட்கள் தமது தேவையில்லை எனவும் தம்மை மனிதர்களாக வாழ அனுமதிக்க வேண்டும் என இங்குள்ள மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு அறையில் 17 முதியவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் கண் பார்வையற்றவர்கள், சிலருக்கு நடக்க முடியாது, அத்துடன் சிலர் நோயாளர்களாக உள்ளனர். அவர்கள் ஒழுங்காக கவனிக்கப்படுவதில்லை. மிஷனரி சகோதரிகளின் உதவுடன் இவர்களின் 7 பேர் அங்கிருந்து அவர்களது விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை வன்னியில் காயமடைந்த நிலையில் அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நோயர்ளர்களை பார்வையிட சென்றதாகவும் அவர்களை பார்வையிட எவரும் அனுமதிக்கப்படுவதில்லை எனவும் இவர்கள் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாதகவும் வன்னிக்குசென்று திரும்பிய மத குரு குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுடன் உதவிக்கு வந்தவர்கள் அங்கிருந்து நேரடியாக நெலுக்குளம் நலன்புரி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மூன்று நாட்களுக்கு முன்னர், 264 பேர் வன்னியில் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களுடன் மேலும் 154 பேர் நோயாளிகளுக்கு உதவிக்கு சென்றவர்கள் எனவும் இவர்கள் அனைவரும் உடனடியாக நெலுக்குளம் நலன்புரி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கணவர் வைத்தியசாலையில் இருக்கும் போது மனைவி நலன்புரி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது என்ன கீழ்த்தரமான நடவடிக்கை. கணவர் முகாமில் இருக்கும் மனைவிக்காக வைத்தியசாலையில் இருந்து அழுகிறார். மனைவி கணவருக்காக முகாமில் இருந்தவாறு கண்ணீர் வடிக்கிறார். உண்மையில் இது போன்ற கொடுமையான மனித உரிமை வன்முறையை காணவில்லை.
அரசாங்கம் மக்களை வன்னியில் இருந்து வெளியில் வருமாறு கோருகிறது. இவ்வறானா நிலையில் எப்படி அவர்கள் வருவார்கள். அங்கிருந்த வந்தவர்கள் சிறைக் கைதிகள் போல் நடத்தப்படுகின்றனர். நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்கள் அங்கிருந்ததை விட இங்கு தாம் பெரும் துன்பத்தை அனுபவிப்பதாக கூறியுள்ளதாகவும் வன்னி சென்று திரும்பியுள்ள மதகுரு தெரிவித்துள்ளார்.
Globaltamilnews
0 விமர்சனங்கள்:
Post a Comment