ஹெரோயின் கடத்தி வந்த இந்திய பிரஜைக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை
30 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை கடத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய பிரஜையான ராஜேந்திரம் சிங்கராஜா என்ற (48 வயது) நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்தது.
1999 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் திகதி இவர் தனது பயணப் பொதியினுள் இதனை மறைத்து வைத்துக் கொண்டு வந்ததாக வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
விமான மூலம் இந்தியாவில் இருந்து வந்த இவர் கட்டுநாயக்க விமான நிலைய போதைவஸ்து தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த பத்து வருடங்களாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த இவர் விசாரணை முடிவின்போது தனது பிள்ளைகளின் கல்விக்காக இத் தொழிலைச் செய்ததாக நீதிபதியிடம் தெரிவித்தார்.
நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி தென்னக்கோன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையில் இவர் கொண்டு வந்தது ஹெரோயின் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து நீதிபதி இவருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment